https://youtu.be/_m9uF-4phso
உடல் சுத்த சிகிச்சைக்கு மதன பழம் என்கிற மருக்காரன் காய்!
உடலை சுத்தப்படுத்தும் சிகிச்சைக்கு மதன பழம் என்கிற மருக்காரன் காய் பயன்படுகிறது. இந்த மதன பழம் வாந்தியை உண்டாக்கும் உடலை சுத்தப்படுத்த பொதுவாக பேதிக்கு மருந்து கொடுப்பார்கள். பித்தம், கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு கழிவுகள் வெளியேற, வாந்தி வரவழைத்து மருத்துவம் செய்வது வழக்கத்தில் இருக்கிறது.
மருத்துவர் ஆலோசனையோடு...
மார்புக்கூட்டு பிரச்சனைகள், ஆஸ்துமா, கண்கள், காதுகள், மூச்சுக் குழல், சைனஸைட்டீஸ், தோல் பிரச்சனைகளுக்கு மிகப்பெரிய அளவில் உடல் சுத்தம் செய்ய வாந்தி வரவழைக்கும் முறையே உள்ளது. இதற்கு பயன்படுவதே மதன பழம். இதை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் வாந்திக்கு பயன்படுத்த கூடாது. காரணம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாந்தி வந்தால் பிரச்சனையாகிவிடும்.
கபம் பித்தத்தை வெளியேற்ற....
ஆஸ்துமா, நெஞ்சு எரிச்சல், சோரியாஸிஸ், அட்டிகேரியா பாதிப்புக்களுக்கு உடலை சுத்தப்படுத்தி கழிவுகள், கபம் பித்தத்தை வெளியேற்றி ஆரோக்கியம் தரும் இந்த மதன பழம் சிகிச்சை. கடுக்காய் எப்படி பித்தம் கபம் குறைக்கிறதோ, அது போல மதன பழம் சிகிச்சையிலும் முறையான கபம் வெளியேறி ஆரோக்கியம் அடைவதை பார்க்கலாம்.
இனிமா தெரபி...
மதன பழம் மருக்காரன் காய் ஆயுர்வேத பஞ்சகர்மம் சிகிச்சை என்பது வாந்திக்கு, பேதிக்கு, மூக்கில் சொட்டு மருந்து, இனிமா தெர,பி கெட்ட ரத்தத்தை வெளியேற்றும் ரத்த மோட்சனம், திசுக்களில் ஏற்படும் வெவ்வேறு வகை வியாதிகள் தீர்க்கும் அருமையான சிகிச்சை. உடலை சுத்தப்படுத்தி ஆஸ்துமாவை குணப்படுத்தும்.
பஃப் எடுத்துக்கறீங்களா?
குழந்தைகள் கூட ஆஸ்துமா நோயினால் அவதிபடுவார்கள். குழந்தை பருவத்தில் இருந்து 18 வயதுக்கு மேல் பஃப் எடுத்துக்கறாங்க. மதன பழம் வாந்தியை உண்டாக்கும் மருந்தாக இருப்பதினால் தகுந்த மருத்தகுவர் ஆலோசனைப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். மதன பழம் நுரையீரல் கழிவுகளை வெளியேற்றும் அருமருந்து.
மூச்சு விடுவதில் சிரமம்...
30 வயது பெண் ஒருவர் என்னை பார்க்க வந்திருந்தார். அவருக்கு தும்மல், அலர்ஜி, ராத்திரியில் மூச்சு விடுவதில் சிரமம். நுரையீரலில் கருப்பு நிறமான பொருட்கள் நிறைந்து கிடக்கிறது. தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியதாக கூறினார். குழந்தை பிறப்புக்கு வேறு பிளான் செய்து கொண்டு இருப்பதாகவும் கூறினார். அவருக்கு ஆயுர்வேத பஞ்சகர்மா சிகிச்சை பரிந்துரை செய்து, வாந்தியின் மூலம் உடல் எவ்வாறு சுத்தம்செய்யப்படுகிறது என்பதையும் கூறி மதன பழம் கஷாயம் முறையாக சொல்லிக்கொடுத்தேன். அதிகமாக வாந்தி எடுக்க கூடாது என்பதற்காக என்ன விதிமுறை பயன்படுத்த வேண்டும் என்பதையும் சொல்லிக்கொடுத்து மதன பழத்தை உபயோகிக்க சொல்லிக் கொடுத்தேன்.
நோயால் கலர் கலர் வாந்தி வரும்...
அவர் வாந்தி எடுக்கும்போது நுரையீரல் சளி முதலில் கருப்பு நிறத்தில் அடுத்து பச்சை நிறத்தில், கடைசியாக மஞ்சள் பச்சை நிறம் என்று வந்த பிறகு அவர் அமைதியானார்.அவரது மருத்துவர் இப்போது நன்றாக இருக்கிறது, ஸ்டீராய்டு மருந்து தேவையில்லை என்று சொன்னதாகவும் அந்த பெண் சொன்னார். சோரியாசிஸ் தோல் நோய் குணமே ஆகாது என்று சொல்லுவார்கள். மீண்டும் மீண்டும் ஸ்டீராய்டு மருந்துகளைத்தான் உபயோகப்படுத்த வேண்டும். ஆனால், சோரியாசிஸ் நோயை தீர்க்கும் அரு மருந்து இந்த மதன பழம் சிகிச்சை முறை. தகுந்த மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மதன பழத்தை உபயோகப்படுத்துதல் கூடவே கூடாது.